கிருஷ்ணகிரி அங்கன்வாடி ஊழியர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Follow Us

கிருஷ்ணகிரி அங்கன்வாடி ஊழியர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியா-ளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்-டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விபரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.

                                                                                                  


விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும், 23ம் தேதி பிற்பகல், 5:--00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும்

அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், தொடர்ந்து ஒரு வருட காலம் பணியை முடித்தப்பின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.

இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்-கலாம். அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும், அங்கன்-வாடி உதவியாளர் பணியிடத்திற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற-வராகவும், தமிழ்


சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


காலிப்பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர் அறிவிக்கப்


பட்டுள்ள பகுதி அல்லது அருகில் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, காலி


பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்-பிக்க வேண்டும்.


இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments