ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணி-யாளர் மற்றும் 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன.
விண்ணப்பங்களை www.icds.tn.gov.in (http://www.icds.tn.gov.in) என்ற இணையத-ளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வரும், 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.அங்கன்வாடி பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி; குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி; அங்கன்வாடி உதவி-யாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது, 25 முடிந்து 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், 40 வயதுக்குள், மாற்றுத்திறனாளிகள், 43 வயதுக்குள் இருக்க வேண்டும். இவ்-வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments