மதுரை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடக்கிறது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப். 23க்குள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் எண்ணிக்கை, இனச்சுழற்சி விவரம் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
பணி நியமனம் பெற்று ஓராண்டு பணி முடித்த பின் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் வழங்கப்படும். 25 முதல் 35 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 வயது வரை, மாற்றுத்திறனாளிகள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
0 Comments