சிவகங்கை அங்கன்வாடி மைய பணியாளர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்

Follow Us

சிவகங்கை அங்கன்வாடி மைய பணியாளர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்

 சிவகங்கை: சிவகங்கை அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

                                                                                 


அவர் கூறியதாவது:


முதன்மை அங்கன்வாடி பணியாளர் 2, குறு அங்கன்வாடி பணியாளர் 2, 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஏப்., 23ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.


தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும். 12 மாத பணி முடித்த பின், சிறப்பு கால முறை சம்பளத்தின் படி பணி வரன்முறை செய்யப்படும். இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். உரிய வயது, கல்வி தகுதிக்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments