ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் கீழ் ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்.23-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா(ராணிப்பேட்டை) தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் 164 அங்கன்வாடி பணியாளர். 3 குறுஅங்கன்வாடி பணியாளர் மற்றும் 155 அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை www.icds.In.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏப்.23ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுதிப்பூதியம் அடிப்படையில் பணி நியம நியமனம் செய்யப் படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஓராண்டு பணி முடித்த பிறகு அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
இதற்கான கல்வி தகுதி அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் 25 முதல் 35 வயது வரை உள்ள விதவைகள். ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி..எஸ்.டி.. பிரிவினராக இருந்தால் 25 வயது முதல் 40 வயதுவரை உள்ள பெண்கள். மாற்றுத்திறனாளியாக இருந்தால் 25 வயது முதல் 38 வயது வரை இருக்க வேண்டும். அதேபோல, அங்கன்வாடி உதவி யாளர்கள் 20 வயது முதல் 40 வயது வரை உள்ள விதவைகள். ஆதரவற்றவர்கள். எஸ்.சி..எஸ்.டி.. பிரிவாக இருந்தால் 20 வயது முதல்
45 வயது வரை உள்ளவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு 20 வயது முதல் 43வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அறிவிக் கப்பட்டுள்ள கிராமப்புற பகுதி களில் குழந்தைகள் மையம் உள்ள அதே பகுதி, ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர்,கிராம ஊராட்சி அருகாமையில் உள்ள பிறகு கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதுவே. மாநகராட்சி, நகராட்சி பகுதியாக இருந்தால் குழந்தைகள் மையம் உள்ள அதே வார்டு அல்லது அருகேயுள்ள வார்டு பகுதிகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காலி பணியிட குழந்தை மையம் உள்ள வட்டாரம் / திட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் மட்டுமே சமர்ப் பிக்க வேண்டும். விண்ணப்பங் களுடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களில் கையொப்பம் இட்ட நகல்களை விண்ணப் பத்துடன் இணைக்க வேண்டும். மேலும், நேர்காணலில் கலந்து கொள்ளும்போது அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
0 Comments