Kalaignar Kaivintai Thittam 2025 : கலைஞர் கைவினைத் திட்டத்தில் தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19.04.2025 அன்று குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைசார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடிரூபாய் வழங்கி விழா பேருரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தின் நேரடி ஒளிபரப்பு காட்சிகள்மதிப்பிற்குரிய மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில்கண்டுகளிக்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்டதொழில் மையஉதவி இயக்குநர் திருமதி.நா.திலகவதிஅவர்கள், மாவட்டமுன்னோடிவங்கிமேலாளர் திரு.சதானந் கலகிஅவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் திட்டபயனாளிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மதிப்பிற்குரிய மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு 'கலைஞர் கைவினைத்திட்டம்" மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தின்கீழ் ரூ.3.00 இலட்சம் வரைபிணையற்றகடனுதவிமற்றும் ரூ.50,000/- வரை மானியம் பெறலாம். 5%வரைவட்டிமானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கானசிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். எந்தவகுப்பினராகவும் இருக்கலாம்என தெரிவித்தார். மாவட்டதொழில் மைய உதவி இயக்குநர் திட்டத்தின் சிறப்பம்சங்கள், அரசுமானியம், திட்டத்தில் பயனடையத் தேவையானவிண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
இத்திட்டத்தின்கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டிடவேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரியமுறையில் ஜவுளிஅச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீள் வலைதயாரித்தல், நகைசெய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணிநெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள், சுதைவேலைப்பாடுகள், பூட்டுதயாரித்தல், தையல் வேலை, கூடைமுடைதல், கயிறுபாய் பின்னுதல், துடைப்பான் செய்தல்,மட்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணிவெளுத்தல், துணிதேய்த்தல், சிற்பவேலைப்பாடுகள், கற்சிலைவடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடிவேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோகவேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், கைவினைப்பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனைவேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் இதுவரை 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 465 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 214 ஒப்பளிப்புகள் இதுவரைபெறபட்டுள்ளன. 110 நபர்களுக்குபயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் பொதுமேலாளர்,மாவட்டதொழில் மையம், 134,எல்க் ஹில் ரோடு, உதகமண்டலம் 643001 என்ற அலுவலத்தை அணுகலாம் மற்றும் 0423-2443947, 8925533996, 8925533997 ஆகிய அலுவலகஎண்களை தொடர்புகொள்ளலாம்.
0 Comments