குட் நியூஸ்..!! சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.56,000 மானியம்..!! விண்ணப்பிப்பது எப்படி..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

 2025-26ஆம் ஆண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

                                                                               


சொட்டுநீர்ப் பாசன மானிய திட்டத்தில், விவசாயிகளுக்கு ஏற்படும் செலவைக் குறைக்க மானியம் வழங்கப்படுகிறது. தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழ மரப்பயிர்களுக்கும், தேக்கு, மகோகனி மரங்கள், தக்காளி, மிளகாய் என காய்கறிப் பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் மிக இன்றியமையாததாக இருக்கிறது.


இந்த திட்டத்தில் மானியம் எப்படி தரப்படுகிறது என்றால், 4 அடி இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புக்கு, பெரிய விவசாயி எனில் ஹெக்டேருக்கு, ரூ.1,05,530 வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,35,855 வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.56,600, பெரிய விவசாயிக்கு ரூ.43,900 மானியமாக வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.


அந்த வகையில், தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சொட்டுநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments