ஆவின் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

 கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாகவுள்ள விற்பனை செயலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                                       


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : ஆவின் நிறுவனம்


வகை : தமிழ்நாடு அரசு வேலை


காலியிடங்கள் : பல்வேறு


பணியிடம் : கள்ளக்குறிச்சி


பதவியின் பெயர் : விற்பனை செயலர்கள்


கல்வித் தகுதி : BBA, MBA


வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் : முதல் மாதம் ரூ.7,500 வழங்கப்படும். தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ.15,000 + பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும்.


விண்ணப்ப கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.


தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 02.05.2025 அன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், இபி அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். ஆண் மற்றும் பெண் இருவரும் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகங்களுக்கு 90430 49160, 97879 73450 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


கூடுதல் விவரங்கள் : https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/04/2025042478.pdf

Post a Comment

0 Comments