இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை: 309 காலிபணியிடங்கள்! விண்ணப்பிக்கத் தயாரா?

 இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே அறியவும்.

                                                                                   


இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

பணியிட விவரங்கள்

நிறுவனம்: Airports Authority of India (AAI)

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்கள்: 309

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் ஆரம்ப நாள்: 25.04.2025

விண்ணப்பம் கடைசி நாள்: 24.05.2025

பணியின் பெயர்: Junior Executive (Air Traffic Control)

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

காலியிடங்கள்: 309

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

Physics மற்றும் Mathematics பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு Full Time Regular Bachelor's Degree (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது ஏதேனும் ஒரு துறையில் Full Time Regular Bachelor's Degree in Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: OBC - 3 ஆண்டுகள், SC/ST - 5 ஆண்டுகள், PwBD (Gen/EWS) - 10 ஆண்டுகள், PwBD (SC/ST) - 15 ஆண்டுகள், PwBD (OBC) - 13 ஆண்டுகள்.

விண்ணப்பக் கட்டணம்

பெண்கள் / ST / SC / PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

Computer Based Test

Application Verification / Voice Test / Psychoactive Substances Test / Psychological Assessment / Physical Medical Examination

முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2002-2025-CHQ.pdf

Post a Comment

0 Comments