வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பில் உதவி சட்ட உதவி வழக்குரைஞா், அலுவலக வேலையாள் பணிகளுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி.முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்பேரில் வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அமைப்பின்கீழ் உதவி சட்ட உதவி வழக்குரைஞா் 2 பணியிடங்கள், அலுவலக வேலையாள் 3 என மொத்தம் 5 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இந்த காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள், இதர தகவல்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை மே 7-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீா்வு மையக் கட்டடம், சத்துவாச்சாரி, வேலூா் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதை விண்ணப்பம், தபால் உறையில் தவறாமல் குறிப்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments