டிசிஎஸ்ஸில் காலியிடங்கள்.. வேலை செய்ய ரெடியா? ஏப்ரல் 19ல் சென்னை - பெங்களூர் - புனேவில் இண்டர்வியூ

Follow Us

டிசிஎஸ்ஸில் காலியிடங்கள்.. வேலை செய்ய ரெடியா? ஏப்ரல் 19ல் சென்னை - பெங்களூர் - புனேவில் இண்டர்வியூ

 முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது வரும் 19 ம் தேதி சென்னை, பெங்களூர், புனே உள்ளிட்ட 3 இடங்களில் நடைபெற உள்ளது. 

                                                                                


தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.


தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக உள்ளது. இதனால் பலரும் ஐடி வேலைகளுக்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கோடை காலம் நெருங்கி வரும் சூழலில் தற்போது அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.


அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது சைபர் செக்யூரிட்டி (Cyber Security) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Zscaler ஸ்கில்செட்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 19 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் சென்னை, பெங்களூர், புனே என மொத்தம் 3 இடங்களில் இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவுக்கு செல்வோர் சென்னை என்றால் TCS Velachery Taramani 100 Feet Road, 165/1A New Colony Road, Velachery, Chennai, என்ற முகவரிக்கு போக வேண்டும்.

பெங்களூர் என்றால் TCS Think Campus B4, Electronic City Phase 2, Bengaluru என்ற முகவரிக்கும், புனே என்றால் TCS Shayadri Park 23, Phase 3, Hinjewadi Rajiv gandhi infotech Park 411057, Pune என்ற முகவரிக்கும் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் கூட பணி வாய்ப்பு என்பது கிடைக்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், தகுதி ஆகியவற்றின் படி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கிற்கு சென்று விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here





Post a Comment

0 Comments