ATM-ல் பணம் எடுக்க எக்ஸ்டரா கட்டணம் வசூல்.. மே 1 முதல் அமல்.. அக்கௌன்ட்ல பணம் இல்லாட்டி அதுக்கும் கட்டணமா?

 ஏடிஎம் கார்ட் (ATM card) பயனர்களின் கனிவான கவனத்திற்கு, வரும் மே 1, 2025 ஆம் தேதி முதல் நீங்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும், இனிமேல் கூடுதல் கட்டணங்களை கட்டாயம் செலுத்த வேண்டுமென்ற புதிய விதிமுறை (new rules from May 1st for ATM withdrawal charges) நடைமுறைக்கு வரவிருக்கிறது.

                                                                              


வழக்கமாக ஏடிஎம் சேவையை (ATM service) பயன்படுத்தும் டெபிட் கார்டு (Debit card) பயனர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட, இனி வரும் மே 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது இனி இன்னும் விலை உயர்ந்ததாக மாறப் போகிறது (ATM Withdrawal Charges Increasing) மக்களே. இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்திற்கு மேல், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இனி கூடுதல் தொகை வசூலிக்கப்படவுள்ளது. ATM கார்டு பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் இலவச பரிவர்த்தனை வரம்புகளுக்கு (ATM free transaction limits) அப்பால் பணம் எடுக்கும் பொழுது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.


மே 1 முதல் ATM-ல் பணம் எடுக்க எக்ஸ்டரா கட்டணம் வசூல்:


ஏடிஎம் பயன்பாட்டில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அங்கீகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை சேவை விநியோகத்தை சமநிலைப்படுத்துவதவும், ஏடிஎம் உள்கட்டமைப்பை பராமரிப்பை ஊக்குவிக்கவும் கைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் அடிக்கடி ஏடிஎம் இல் இருந்து பணம் வித்ட்ராவ் (ATM cash withdrawal charges increase) செய்யும் ஒரு நபர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.


மே 1 முதல் அமலுக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட ஏடிஎம் விதிகள் மற்றும் கட்டணங்களின் விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைக்கென்று (ATM card transaction charges) சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது.


1. மெட்ரோ நகரங்களில் சொந்த வங்கி ஏடிஎம் சேவை (Own Bank ATM In Metro Cities):


- இங்கு ATM சேவையை பயன்படுத்த மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.


- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது ரூ. 21 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.


- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 25 ஆக விலை உயரப்போகிறது.


- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு 4 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும்.


2. மெட்ரோ அல்லாத நகரங்களில் சொந்த வங்கி ஏடிஎம் சேவை (Own Bank ATM In Non-Metro Cities):


- இங்கும் 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.


- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 வசூலிக்கப்பட்டு வருகிறது.


- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 23 ஆக விலை உயரப்போகிறது.


- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு இனி 2 ரூபாய் கூடுதலாக நீங்கள் வழங்க வேண்டும்.


3. மெட்ரோ நகரங்களில் பிற வங்கி ஏடிஎம் சேவை (Other Bank ATM In Metro Cities):


- இங்கு 1 மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 வசூலிக்கப்பட்டு வருகிறது.


- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு நீங்கள் இனி 4 ரூபாய் கூடுதலாக தர வேண்டும்.


4. மெட்ரோ அல்லாத நகரங்களில் பிற வங்கி ஏடிஎம் சேவை (Other Bank ATM In Non-Metro Cities):


- இங்கு 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகிறது.


- கூடுதல் பரிவர்த்தனைக்கு இப்போது வரை ரூ. 21 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


- மே 1, 2025 ஆம் தேதி முதல் இது ரூ. 23 ஆக உயரப்போகிறது.


- ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு நீங்கள் இனி 2 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்.


5. நிதி அல்லாத ATM பரிவர்த்தனை (Non-Financial ATM Transactions):


- இந்த சேவைக்கு 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


- இதுவரை எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட்டதில்லை.


- மே 1, 2025 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி அல்லாத ATM பரிவர்த்தனைக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்.


6. சர்வதேச ஏடிஎம் வித்ட்ரா சேவை (International ATM Withdrawals):


- இலவச பரிவதனைகள் எதுவும் கிடையாது


- இதற்கு முன்பு வரை ஒவ்வொரு கட்டணத்திற்கு ரூ. 125 முதல் ரூ. 150 வசூலிக்கப்பட்டு வந்தது.


- மே 1, 2025 முதல் ரூ. 150 முதல் ரூ. 200 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


7. நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Declined Transactions or Insufficient Funds):


- வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால் ATM சேவை பயன்படுத்தியதற்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டு வந்தது.


- மே 1, 2025 முதல் இது ரூ. 25 ஆக வசூலிக்கப்படும்.


- இனி ATM சேவையை நீங்கள் பயன்படுத்தி பணம் வரவில்லை என்றால் இனி 5 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் மக்களே.


உங்கள் கணக்கில் பணமில்லை என்றால் கூட, இனி அதை ATM சேவை மூலம் நீங்கள் தெரிந்துகொண்ட காரணத்திற்காக ரூ. 25 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கப்போகிறது. இனி பொதுமக்கள் ATM சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால், சரியாக திட்டமிட்டு பயன்படுத்து வேண்டும். இல்லையென்றால், கட்டாயம் கூடுதல் கட்டணங்களில் இருந்து தப்பிக்க முடியாது.

Post a Comment

0 Comments