விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள குழந்தைகள் மையங்களில் 141அங்கன்வாடி பணியாளர்கள், 115 உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின்கீழ் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரத்தின் பணியிட அறிவிப்பு அந்தந்த அலுவலகங்களில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு ஏப். 23 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்கள் 12 மாத காலம் பணியை முடித்த பின் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.
பணியாளருக்கு பிளஸ் 2 தேர்ச்சி, 25 வயது முதல் 35 வயது வரையும்,உதவியாளருக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, 20 முதல் 40 வயது வரையும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்ச்சி உண்டு, என்றார்.
0 Comments