புதுக்கோட்டை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025

Follow Us

புதுக்கோட்டை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

                                                                                        



புதுக்கோட்டை: 281 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 196 அங்கன்வாடி உதவியாளர்கள்.


இந்த அறிவிப்பு தொடர்பான அறிக்கை மாவட்ட திட்ட அலுவ லகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி..


இப்பணியிடங்களுக்கு தமிழ் சரளமாக எழுத படிக்கத் தெரிந்த பெண்கள் மட்டும் விண்ணப் பிக்கலாம். அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின், சுய சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் அதற்கான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்ப மிட்டு இணைக்க வேண்டும். நேர்காணலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.



Post a Comment

0 Comments