வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கனுமா?. சூப்பர் வாய்ப்பு.. டிராப்ஷிப்பிங் தொழிலை தொடங்குவது எப்படி?

Follow Us

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கனுமா?. சூப்பர் வாய்ப்பு.. டிராப்ஷிப்பிங் தொழிலை தொடங்குவது எப்படி?

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அதாவது வீட்டில் இருந்தே அதிக தூரம் செல்லாமல் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.

                                                                            


ஆனால், பெரும்பாலானவர்கள் தொழில் செய்ய விரும்பினாலும், ஒரு பொது பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், பணம் இழக்கும் அபாயம். அதனால்தான், அவர்கள் முடிவு எடுப்பதில் தாமதிக்கிறார்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால், உங்களுக்கான அருமையான யோசனையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தற்போது, வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க பல சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, குறைந்த முதலீட்டில் (Low-Cost Business Ideas) தொடங்கக்கூடிய தொழில்கள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன.சிறிய முதலீட்டில், பெரிய லாபம் ஈட்டக்கூடிய தொழில்கள் இவை: 1.டிராப்ஷிப்பிங் (Dropshipping): டிராப்ஷிப்பிங் என்பது முதல் முதலீடு குறைவாக, சேமிப்பிடம் (Stock) இல்லாமல் ஆன்லைன் விற்பனை செய்யக்கூடிய சிறந்த வியாபாரம். இது இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். டிராப்ஷிப்பிங் தொழில் என்பது வீட்டிலிருந்தோ அல்லது உலகின் எந்த இடத்திலிருந்தோ நடத்தக்கூடிய நவீன ஆன்லைன் வியாபாரம் ஆகும்.அதன்படி, இந்தியாவில் ஒரு சிறிய அளவிலான டிராப்ஷிப்பிங் வியாபாரம் தொடங்க, ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை செலவாகலாம். உங்கள் தொழில் வளர்ச்சி, பொருள் தேர்வு, சந்தைப்படுத்தல் (Marketing) போன்றவற்றைப் பொறுத்து இந்த செலவு மாறுபடும்.

மேலும், டிராப்ஷிப்பிங் வியாபாரத்தில் லாப விகிதம் பொதுவாக 15% முதல் 20% வரை இருக்கும். ஆனால், இது தொழில் துறை (Sector) மற்றும் விற்பனை செய்யும் பொருட்களைப் பொறுத்து மாறுபடும். இதேபோல், E-commerce டிராப்ஷிப்பிங் வியாபாரம் என்பது குறைந்த முதலீட்டில், குறைந்த ஆபத்துடன் செய்யக்கூடிய அதிக லாபம் தரும் ஆன்லைன் தொழில். மேலும், இதை சைடு பிசினஸ் ஆக, கூடுதலாக செய்யலாம்.இந்தியாவில் டிராப்ஷிப்பிங் தொழிலை எவ்வாறு தொடங்குவது?E-commerce டிராப்ஷிப்பிங் வியாபாரத்தை தொடங்க, நீங்கள் ஒரு வலைதளத்தை உருவாக்கி, பொருட்களை சேர்க்க வேண்டும்

வாடிக்கையாளர் உங்களிடமிருந்து பொருளை வாங்கினால், அந்த ஆர்டர் டிராப்ஷிப்பிங் நிறுவனம் (Supplier) மூலம் நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். இருப்பினும், ஒரு தொழில்முனைவோராக, உங்கள் கவனம் பொருட்கள் தயாரிப்புகள் மற்றும் விளம்பரங்களில் இருக்க வேண்டும். நீங்கள் சரியான பொருளை தேர்வு செய்தால், சரியான வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்தால், உங்கள் விற்பனை அதிகரிக்கும். மேலும், Google Trends மூலம் ஒரு பொருளின் மார்க்கெட் டிமாண்ட் மற்றும் நபர்கள் எவ்வளவு தேடுகிறார்கள் என்பதை அறியலாம்.Google Trends மூலம் சந்தை ஆய்வு (Market Research) செய்ய எப்படி?

முதலில் Google Trends சென்று, உங்கள் பொருளின் பெயரை தேடவும், பின்னர் எந்த நாடுகளில், மாநிலங்களில் அதிகம் தேடுகிறார்கள் என்பதை பாருங்கள், இதனையடுத்து Seasonal Demand உள்ளதா என பாருங்கள் (சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் அதிகம் விற்கப்படும்), பின்னர், உங்கள் போட்டியாளர்கள் (Competitors) எந்த பொருட்களை அதிகம் விற்கிறார்கள் என மதிப்பீடு செய்யுங்கள்.Print-on-Demand T-Shirt வியாபாரம்: இந்த வியாபாரம் இன்று Gen Z (1997 - 2012 பிறந்தவர்கள்) மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இதற்கு, தனிப்பட்ட, யாருக்கும் கிடைக்காத (Unique) டிசைன் போட்ட T-Shirts, Hoodies, Mugs, Posters போன்றவை விருப்பமானவையாக உள்ளதே காரணம். மேலும் இவைகள், Instagram உள்ளிட்டவைகள் மூலம் விற்பனை செய்ய எளிதாக உள்ளது. அந்தவகையில், Bewakoof.com போலவே, நீங்களும், உங்கள் சொந்தT-Shirt தொழிலை ஆரம்பிக்கலாம்.

இதற்காக இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உங்கள் சொந்த Print Machine வாங்கி செய்யலாம், 2வது POD Services-ஐ பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், "சரியான டிசைன் & மார்க்கெட்டிங்" தான். நீங்கள் புதிதாக வணிகம் தொடங்க விரும்பினால், Shopify போன்ற eCommerce Platforms மூலம் இந்த வியாபாரம் செய்யலாம்.





Post a Comment

0 Comments