பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் .
2024-25 முதல் 2028-29 வரை தகுதியான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2025 மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். டிஜிட்டல் தளத்திலும் இதற்கான வசதி உள்ளது. இனி ஆவாஸ் பிளஸ் மொபைல் ஆப் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியான குடும்பங்களின் பெயர்கள் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சி செயலாளர் அல்லது வேலைவாய்ப்பு உதவியாளர் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தை சேர்ந்த வீடில்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 3 2025 நிலவரப்படி இந்த திட்டத்தில் சுமார் 112.46 லட்சம் வீடுகளுக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்றும் இந்த திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையின் படி 12 முதல் 36 மாதங்கள் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments