நேர்காணல் மட்டும் தான்.. டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை!

Follow Us

நேர்காணல் மட்டும் தான்.. டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை!

 ம த்திய அரசின் தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NPCC) நிறுவனத்தில் உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

தள பொறியாளர் (சிவில்)

காலியிடங்கள்: 03

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ/பி.டெக் படித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

2. தள பொறியாளர் (மின்சாரம்)

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: மின் பொறியியலில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

3. தள பொறியாளர் (மெக்கானிக்கல்)

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது

கல்வி தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் BE/B.Tech முடித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

4. தளப் பொறியாளர் (கட்டிடக் கலைஞர்)

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: கட்டிடக்கலையில் பி.இ/பி.டெக் முடித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் 

5. Sr. Associate (Office Support) - HR

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: MBA (HR)/HR இல் முதுகலை பட்டதாரி முடித்தவர்கள் இந்த பாணிக்கு விண்ணப்பிக்கலாம். 

6. சீனியர் அசோசியேட் (அலுவலக ஆதரவு) - நிதி

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.33,750/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: CA/CMA/MBA (நிதி)/ சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

7. ஜூனியர் இன்ஜினியர் (சிவில்)

காலியிடங்கள்: 04

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.25,650/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

8. உதவியாளர் (அலுவலக உதவி)

காலியிடங்கள்: 01

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது 

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரியாக இருந்தால் போதும். 

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தினை https://npcc.gov.in/writereaddata/others/Advertisement_NWZdt.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

NPCC Limited, 

Plot No.148, Sector-44, 

Gurugram, Haryana 

(Landmark-near HUDA Metro Station).

நேர்காணல் நடைபெறும் நேரம்: 9:30 am to 03:30 pm

தள பொறியாளர் (சிவில்) 22.04.2025

ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 23.04.2025

தளப் பொறியாளர் (மின்சாரம், இயந்திரவியல், கட்டிடக் கலைஞர்) 24.04.2025

சீனியர் அசோசியேட் (மனிதவளம், நிதி), உதவியாளர் (அலுவலக ஆதரவு) 25.04.2025

Post a Comment

0 Comments