இலவசமாகவே பியூட்டி பார்லர் பயிற்சி.! பெண்களுக்கு அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி.

                                                                                   


Free cosmetology training for women : ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பேக்கரி தொழில் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி, யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையில் வேலைவாய்ப்புகான ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அழகு கலை நிபுணர் பயிற்சியானது இலவசமாகவே வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் அழகு கலை நிபுணராவதற்கு விருப்பமா? இன்றே பதிவு செய்யு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி பணி விவரம், தகுதி, பயிற்சி முறை, ஊதியம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியிட்டுள்ளது.


பணி சார்ந்த விளக்கம்:


வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப ஒப்பனை, சிகை அலங்காரம், அழகு சிகிச்சை அல்லது நக பராமரிப்பு ஆகியவற்றில் சிறந்த சேவைகளை வழங்குதல்.


சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் கூடிய சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய உதவுதல்.


அழகுதுறை சார்ந்த தொழில்துறை நுட்பங்களுடன் உயர்தர. வாடிக்கையாளர் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான தயார்படுத்துதல்.

பயிற்சி வகைகள்: (பயிற்சி காலம்: 2 மாதம்)


ஒப்பனை கலைஞர் (Make-up Artist)


உதவி அழகு கலை நிபுணர் (Assistant Beauty Therapist)


தகுதி


வயது: 18 முதல் 33 வரை உள்ள பழங்குடியின பெண்கள் மட்டும் அனுமதி.


கல்வி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல்

பயிற்சி வழங்குநர்


சேர்வராயஸ் விருதாம்பாள் அறக்கட்டளை Shevaroys Viruhtambal Charitable Trust


பயிற்சி இடம்:


YERCAUD


NILGIRIS


ஊதியத்துடன் வேலை வாய்ப்பு:


அனுபவத்துடன் கூடிய ஊதியத்துடன் வேலை மற்றும் அழகுக்கலை துறையில் உயர்வுக்கான வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு

வேலை உத்தரவாதம்.

தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம் மேலும் அரசின் திறன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இலவச அழகுக்கழைப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் https://bit.ly/VettriNichayamskill பயன்படுத்தி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments