எல்.ஐ.சி ஆனது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பல ஓய்வூதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதில் நடப்பாண்டில் இருந்து புதிதாக ஸ்மார்ட் ஓய்வு திட்டத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்தால் போதும். மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர ஓய்வூதியத்தை அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல பெற்றுக் கொள்ளலாம். அதன்படி மாதத்திற்கு ஆயிரம் அல்லது மூன்று மாதங்களுக்கு 3000 அல்லது ஆறு மாதங்களுக்கு 6 ஆயிரம் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் வரை அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.
மேலும் lic யின் இந்த புதிய திட்டத்தில் 18 முதல் 100 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இரண்டு வகையான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளது. முதலாவது ஒற்றை ஆயுள் வருடாந்திரம் திட்டம் . இதில் பயானார்கள் இறக்கும் வரை ஓய்வூதியம் கிடைக்கும் .இரண்டாவது கூட்டு ஆயுள் வருடாந்திரம் திட்டம். பாலிசிதாரர்களோடு சேர்ந்து அவருடைய மனைவியும் ஓய்வுதியும் பெறலாம். இந்த திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் எல்ஐசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது பக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
0 Comments