ATM மூலம் பணம் எடுப்பவரா நீங்கள்? ரிசர்வ் வங்கியின் முடிவால் மக்கள் அதிர்ச்சி

 ATM மூலம் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டாலும், இன்னும் சில அத்தியாவசிய தேவைகளுக்கு பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

                                                                            


அப்படி பணத்தை ரொக்கமாக பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும், வங்கிக்கு செல்லாமல், அருகிலுள்ள ஏடிஎம் எந்திரங்களையே பயன்படுத்துகிறார்கள்.


ஏற்கனேவே வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.


கட்டண உயர்வு


இதன்படி வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஏடிஎம் பரிமாற்றக் கட்டணமாக 17 ரூபாயும், பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் 6 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.


தற்போது அந்த தொகையை உயர்த்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி பணம் எடுப்பதற்கு 2 ரூபாய் உயர்த்தி 19 ரூபாயாகவும், பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் 1 ரூபாய் உயர்த்தி 7 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்ட உள்ளது.





இந்த கட்டண உயர்வு மே 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளையில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்மை பயன்படுத்தும் போதும், மற்ற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் போதும் மெட்ரோ நகரங்களில் 5 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 3 முறையும் கட்டணம் வசூலிக்கப்படாது.

Post a Comment

0 Comments