இந்தியன் ரயில்வேயில் ஏஎல்பி எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 9,900 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் 10 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய ரயில்வேயில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசின் தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், ஓய்வு கால சலுகைகள் என பல சலுகைகள் அளிக்கப்படுவதால் எப்படியாவது ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தால் போதும் என இளைஞர்கள் ரயில்வே பணிகளுக்காக ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள்.
அதிலும் ரயில்வேயில் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் ஆக வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த ரயில்வே லோகா பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி லோகோ பைலட் பணி: 9,900 காலிப்பணியிடங்கள்,
கல்வி தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, பி இ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரானிஸ் / எலக்ட்ரிக்கல்/ ஆட்டோமொபைல் என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் 33 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊதிய கமிஷன் 7-வது படி லெவல் 2-சம்பளம் அளிக்கப்படும். அதாவது ஆரம்ப சம்பளமே ரூ.19,900 முதல் வழங்கப்படும். இதுபோக இதர சலுகைகளும் உண்டு. இந்த லோகோ பைலட் பணியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியமான ஆர்.ஆர்.பி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை சிபிடி எனப்படும் கணிணி வழியிலான தேர்வு நடைபெறும். சிபிடி 1, 2 என இரு கட்டங்களாக தேர்வு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவையும் நடைபெறும்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். முதல் கட்ட தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். இவர்கள் முதல் கட்ட தேர்வு எழுதினால் முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 10.04.2025 (தோராயமானது). விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.05.2025
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம். விண்ணப்ப அறிவிப்பில் கோரப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள்.
https://www.rrbchennai.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments