ரூ.7000 டூ ரூ.50000 வரை.. தமிழக அரசே உங்களுக்கு கொடுக்கும்.. எப்படி விண்ணப்பிப்பது? யார் பெறலாம்?

 சென்னை: தமிழ்நாட்டில் இன்னொரு நேரடி நிதி உதவி திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ. 7000 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தொடர்பாக இங்கே பார்க்கலாம்.

                                                                                


இந்த திட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கெல்லாம் பொருந்தும் தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

இந்த திட்டத்தில் சேர நீங்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும். அல்லது தேர்விற்கு தயாராக வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த 1000 மாணவர்கள் தனியாக தேர்வு செய்யப்படுவார்கள். சில சோதனைகள், டெஸ்டுகள் அடிப்படையில் இந்த தேர்வு நடக்கும்.

தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். அதாவது இவர்கள் படிக்கும் காலம் முழுக்க வங்கி கணக்கில் நேரடியாக பணம் வழங்கப்படும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர்முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இது போக பட்ஜெட்டில், நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும். 

பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. 

இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையம் அமைக்கப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும், என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Post a Comment

0 Comments