சென்னை: பான் கார்டுகளின் அவசியம் என்னென்ன, எதற்கெல்லாம பான் கார்டு தேவைப்படும்? ஒருவரே 2 பான் பார்டுகளை வைத்திருக்க முடியுமா? அவ்வாறு வைத்திருப்பதை எப்படி சரண்டர் செய்வது? அனைத்தையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய சூழலில் பான் கார்டு தவிர்க்க முடியாதது .. வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க பான் கார்டு உதவுகிறது. வரி கட்டணம், டிடிஎஸ்/டிசிஎஸ், வருமான வரி கணக்கு, குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். ஒருவரின் முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் ஆகியவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது.
ஆதார் கார்டு போல, பான் கார்டுகள காலாவதியாவதில்லை.. ஒருமுறை பான் கார்டு உருவாக்கப்பட்டால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். அதை மீண்டும் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
பான் கார்டு எதற்கெல்லாம் தேவைப்படும்?
வாகனம் வாங்குவது/விற்பது, வங்கி கணக்கு தொடங்குவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்குவது, டீமாட் கணக்கு தொடங்குவது, 50,000 ரூபாய்க்கு மேல் ஓட்டலில் பில் செலுத்துவது, 50,000 ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடுவது, மியூச்சுவல் ஃபண்டில் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வது, debuntrues அல்லது bonds வாங்குவதற்கு 50,000 ரூபாய் மேல் செலுத்துவது, வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் போடுவது, 50,000 ரூபாய்க்கு மேல் ஆயுள் காப்பீடு பிரிமீயம் செலுத்டுவது உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயம் தேவைப்படும். அதேபோல, பான் கார்டு நம்பரை மாற்ற முடியாது.
எனினும், பான் கார்டிலுள்ள தகவல்களை புதுப்பித்துக் கொள்ள அல்லது திருத்திக் கொள்ள முடியும்.. புதிய பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுனால் அல்லது திருத்தம் செய்ய வேண்டுமானால், http://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பயன்படுத்த வேண்டும்.
10,000 அபராதம் அதேபோல, ஒரே ஒரு பான்கார்டுதான் வைத்திருக்க அனுமதி உண்டு.. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்க கூடாது.. அப்படி வைத்திருந்தால், வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும்.
பான்கார்டு மிகவும் அவசியம்.. ஆனால், யாராக இருந்தாலும் ஒரே ஒரு பான்கார்டுதான் நாம் வைத்திருக்க அனுமதி உண்டு.. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்க நமக்கு அனுமதி கிடையாது.. ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்துவிடும்.. அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும். ஏனென்றால், ஒரு சிலர் மோசடிக்காக பல பான் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

அதனால்தான், இது சட்டப்படி தவறு என்பதால், உடனே ஒப்படைத்துவிட வேண்டும். இந்த பான் எண்ணை ஒப்படைப்பது எப்படி தெரியுமா?
ஆன்லைன், ஆஃப்லைன், இந்த இரண்டிலுமே பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் சரண்டர் செய்யும் முறை இதுதான் PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதில், PAN நம்பரை பதிவிட வேண்டும்..
ITEM NO: 11ல், உங்களிடமிருக்கும் 2வது பான் எண்ணின் விவரங்களை தர வேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL வெப்செட்டிற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஆஃப்லைனில் சரண்டர் செய்யும் முறை இதுதான் படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்..

இந்த படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL TIN வசதி மையத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.. பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை உங்களிடமே வைத்து கொள்ள வேண்டும். அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.. அதில், வருமான வரித் துறையின் வெப்சைட்டில், உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார்? என்பதை அறியலாம்.. இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதுடன், சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் NSDL TIN இலிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.
பான்கார்டில் உள்ள தவறுகளை எப்படி திருத்தம் செய்யலாம் - மத்திய அரசின் https://www.pan.utiitsl.com/ என்ற வெப்சைட்டில் நுழைந்து, Change/Correction in PAN Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். - Apply for Change / Correction in PAN Card details என்பதை கிளிக் செய்ய வேண்டும். - உங்களின் பான் நம்பரை தந்து, உறுதி செய்யும் முன்பு, முதல் வரியில் physical மற்றும் Digital என்ற 2 ஆப்ஷனில், Digital ஆப்ஷனை தேர்வு செய்து, Aadhaar based e-KYC ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும். - உங்கள் பெயர் முதல் பெற்றோர் பெயர் உள்ளிட்ட அனைத்தையும் தந்து மாற்றிக்கொள்ள முடியும். - கடைசியாக ஆதார் எண் கொடுத்து, ஆதாரில் இருக்கும் பெயரை பதிவிட்டு, கொடுக்கப்பட்ட விபரங்களை உறுதி செய்து SUBMIT தர வேண்டும்.
0 Comments