சென்னை: அரசு நலத்திட்ட உதவிகள் பெற உடனே தனித்த ஐடி எண் வாங்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. யுனிக் ஐடி எனப்படும் தனித்துவமான ஐடி எண் பெற அருகில் உள்ள இ சேவை மையங்களில், தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை, கைபேசியை கொண்டு சென்று பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்
விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 நிதி உதவி அளிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், விவசாயிகளின் தகவல்களை சேகரிக்க பிரத்யேக செயலி ஒன்றை மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபார்த்து ஆதார் எண்ணை போன்று விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை எளிதில் பெற வசதியாக தனித்துவமான அடையாள எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முகாம்கள் தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை செய்து வருகிறார்கள். இது மட்டும் இன்றி யுனிக் ஐடி எனப்படும் தனித்துவமான ஐடி எண் பெற பொது இ-சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, அனைத்து விவசாயிகளும் தங்கள் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தை பயன்படுத்தி தங்களுடைய பட்டா, ஆதார் அட்டை, கைபேசியை கொண்டு சென்று பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இனி வரும் நாட்களில் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற இந்த தனித்துவ அடையாள எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த எண் எனவே மிக முக்கியமானது என்பதால், தவறாமல் அனைத்து விவசாயிகளும் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 82 ஆயிரத்து 495 விவசாயிகள் உள்ளனர். இதில் இதுவரை 11 ஆயிரத்து 546 விவசாயிகளே தனித்துவமான அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா எண், ஆதார் எண், செல்போன் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்" என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments