இந்திய கடற்படையில் காலியாக இருக்கும் இடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம் அப்படி தற்போது காலியாக உள்ள 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
1.Syrang of Lascars
காலியிடங்கள்: 57
சம்பளம்: சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.
என்ன தகுதி வேண்டும் ?
(அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
(ஆ) உள்நாட்டு கப்பல்கள் சட்டம், 1917 அல்லது வணிகக் கப்பல் சட்டம், 1958 இன் கீழ் வழங்கப்பட்ட சிராங் சான்றிதழ்.
(இ) இருபது குதிரைத்திறன் கொண்ட பதிவுசெய்யப்பட்ட கப்பலின் சிராங்-இன்-சார்ஜாக இரண்டு ஆண்டுகள் அனுபவம்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
2.Lascar-l
காலியிடங்கள்: 192
சம்பளம்: இந்த பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் 56,900/- வரை சம்பளம் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது
என்ன தகுதி வேண்டும்?
(அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
(ஆ) நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
(இ) பதிவுசெய்யப்பட்ட கப்பலில் ஒரு வருட அனுபவம்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
3.Fireman (Boat Crew)
காலியிடங்கள்: 73
சம்பளம்: இந்த பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் 56,900/- வரை சம்பளம் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது
என்ன தகுதி வேண்டும் ?
(அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
(ஆ) நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
(இ) கடலுக்கு முந்தைய பயிற்சி வகுப்பை முடித்ததற்கான சான்றிதழ்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
4.Topass
காலியிடங்கள்: 05
சம்பளம்: இந்த பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் 56,900/- வரை சம்பளம் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது
என்ன தகுதி வேண்டும் ?
(அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
(ஆ) நீச்சல் அறிவு.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை:
தகுதிப் பட்டியல்
எழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர் .
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற தஹிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் புகைப்படம் , கையெழுத்து, தகுதி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள் .
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025
0 Comments