SBI MF: வெறும் ரூ. 250 முதலீட்டுக்கு ரூ.7 லட்சம் உறுதி! சாமானியர்களை லட்சாதிபதியாக்கும் திட்டம்!

Follow Us

SBI MF: வெறும் ரூ. 250 முதலீட்டுக்கு ரூ.7 லட்சம் உறுதி! சாமானியர்களை லட்சாதிபதியாக்கும் திட்டம்!

 சமீபத்தில் நாட்டின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் வெறும் 250 ரூபாயில் தொடங்கக்கூடிய புதிய முதலீட்டு திட்டமான ஜன்நிவேஷ் எஸ்ஐபி-ஐ அறிமுகப்படுத்தியது. ஏழைகள் மற்றும் சாமானியர்களும் மியூச்சுவல் ஃபண்டுகளை எளிதாக அணுகும் விதமாக இந்த எஸ்ஐபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தினசரி, வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை முதலீடு செய்ய முடியும். சிறிய தொகையில் தொடங்க விரும்புபவர்களும் இதில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.250 மட்டும் சேமிப்பதன் மூலம் ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெற முடியும்.

                                                                        



SBI JanNivesh SIP-யில் யார் முதலீடு செய்யலாம்?: எஸ்பிஐ ஜன்நிவேஷ் SIP திட்டத்தில் மாணவர்கள், முதல் முறை முதலீடு செய்பவர்கள், வர்த்தகர்கள் அல்லது சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

SBI JanNivesh SIP-யில் செய்யப்படும் முதலீடுகள் எங்கே செல்கிறது?: ஜன் நிவேஷ் எஸ்ஐபி மூலம் செய்யப்படும் அனைத்து முதலீடுகளும் எஸ்பிஐ பேலன்ஸ் அட்வான்டேஜ் ஃபண்டுக்கு செல்கிறது. எஸ்பிஐ-யின் Yono அப்ளிகேஷன் மூலம் முதலீடு செய்யலாம். 

இது தவிர paytm, ஜெரோதா மற்றும் க்ரோ போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். ரூ. 250 மாதாந்திர SIP மூலம் 10 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?: ஒரு முதலீட்டாளர் மாத மாதம் 250 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக 30,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீதம் வருமானம் கிடைத்தால் ரூ.26,009 ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸ் ரூ.56,009 பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 250 மாதாந்திர SIP மூலம் 20 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?: 250 மாதாந்திர SIP மூலம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 12 சதவீத வருமானத்தில் 60,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு ரூ.1.69 லட்சம் ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸாக ரூ.2.29 லட்சம் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ. 250 மாதாந்திர SIP மூலம் 30 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?: 250 மாதாந்திர SIP மூலம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 12 சதவீத வருமானத்தில் 90,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு ரூ.6.80 லட்சம் ரிட்டன்ஸ் கிடைக்கும். அப்படியானால் மொத்த கார்பஸாக ரூ.7.70 லட்சம் பெற்றுக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments