யூடியூப் சேனல் தொடங்க போறீங்களா? ரூ. 1 லட்சம் வருமானம் பெற எவ்வளவு வியூஸ் தேவை?

Follow Us

யூடியூப் சேனல் தொடங்க போறீங்களா? ரூ. 1 லட்சம் வருமானம் பெற எவ்வளவு வியூஸ் தேவை?

 இன்றெல்லாம் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு சிலர் யூடியூப் சேனல் தொடங்குகின்றனர். ஆனால் அனைவருக்குமே யூடியூப் கைக்கொடுக்கிறதா? என்றால் அப்படி இல்லை. சிலருக்கு யூடியூப் வருமானத்தை அள்ளி வழங்கினாலும், சிலருக்கு இதில் வருமானம் கிடைப்பதில்லை. நீங்களும் யூடியூப் சேனல் தொடங்க திட்டமிட்டிருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று 1 லட்சம் ரூபாய் வருமானம் பெற உங்கள் வீடியோவிற்கு எத்தனை வியூஸ் தேவைப்படும் என்பதை பார்ப்போம்.





யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பது பல்வேறு காரணங்களை பொறுத்து மாறுபடலாம். நீங்கள் போடப் போகும் வீடியோ வகை, எவ்வளவு பார்வையாளர்கள் உங்களுக்கு கிடைக்கின்றனர், எந்த பிராண்ட் விளம்பரம் உங்கள் வீடியோக்களில் தெரிகிறது என்பதை பொறுத்து யூடியூப் வருமானம் மாறுபடலாம். ஒவ்வொரு மாதமும் யூடியூப் சேனலில் இருந்து 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கு எவ்வளவு வியூஸ் தேவைப்படும் என்பதை பார்ப்போம்.

யூடியூப் மூலம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுடைய வீடியோவுக்கு குறைந்தது 1 லட்சம் வியூஸ் இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் நீங்கள் போடும் கன்டென்ட், உங்கள் வீடியோவுக்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் பிற காரணிகளையும் சார்ந்தது தான். எவ்வளவு பணம் கிடைக்கும்?: உங்கள் வீடியோவுக்கு 1,000 வியூஸ் இருந்தால் ரூ. 1,100 முதல் ரூ. 3,700 வரை சம்பாதிக்க முடியும். அதுவே 10,000 வியூஸ்கள் இருந்தால் ரூ. 11,000 முதல் ரூ. 37,000 வரை சம்பாதிக்கலாம். உங்கள் வீடியோவுக்கு 1 லட்சம் வியூஸ்கள் இருந்தால் யூடியூபில் இருந்து ரூ.1.1 லட்சம் முதல் ரூ.3.7 லட்சம் வரையில் சம்பாதிக்க முடியும்.

யூடியூபில் இருந்து நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும் விஷயங்கள்:

கன்டென்ட்: கன்டென்ட் வகையை பொருத்து உங்கள் வருமானம் மாறுபடலாம். தரமான கன்டென்ட்களை பதிவிட்டால் உங்களுக்கு பார்வையாளர்கள் அதிகரித்து சம்பாத்தியமும் அதிகமாக இருக்கும்.

 போட்டியாளர்கள்: இன்றெல்லாம் வீட்டிற்கு ஒருவர் யூடியூப் சேனல் வைத்திருக்கின்றனர். எனவே உங்களுடைய போட்டியாளர் யார்?, நீங்கள் உருவாக்கும் கன்டென்டுகளை போலவே அவர்களும் உருவாக்கினார்கள் என்றால் இருவருக்குமான வித்தியாசம் என்ன? என்பது போன்ற விவரங்களை ஆராயுங்கள். தனித்துவமாக தெரிவதற்கு என்னென்ன விஷயங்களை சேர்க்க வேண்டுமோ அவற்றையெல்லாம் உங்கள் வீடியோவில் சேர்த்து பதிவிடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். வீடியோவின்

 நீளம்: நீண்ட வீடியோக்களில் அதிக விளம்பரங்கள் காட்ட முடியும், இதனால் அதிக வருமானம் கிடைக்கும். வீடியோவில் பார்வையாளர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்கிறார்களா என்பதும் முக்கியம்.


Post a Comment

0 Comments