வீட்டுக் கடன், வாகன கடனுக்கான ஈஎம்ஐ குறையப்போகுது.. RBI கொடுத்த குட்நியூஸ்..!!

Follow Us

வீட்டுக் கடன், வாகன கடனுக்கான ஈஎம்ஐ குறையப்போகுது.. RBI கொடுத்த குட்நியூஸ்..!!

 2025-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும் வருமான வரி விலக்குகளுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு மற்றொரு நற்செய்தியாக, ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது.





இதன் மூலம் வீட்டுக் கடன்,வாகன கடன் என அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து ஈஎம்ஐ தொகை குறைய உள்ளது. கடந்த 2023 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விலைவாசி உயர்ந்துள்ள வேளையில் சாமானிய மக்களுக்கு கடனுக்கான ஈஎம்ஐ பெரும் சுமையாக இருந்த வேளையில், இந்த ரெப்போ விகித குறைப்பு ஈஎம்ஐ வாயிலாக சில நிதி ஆதாரத்தை சாமானிய மக்களுக்கு கிடைக்கசெய்யும்.

இதேபோல் வங்கிகள் இந்த வட்டி விகித குறைப்பின் நன்மையை முழுமையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வங்கிகளின் முடிவின் அடிப்படையில் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். எனவே வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் வாங்கியவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு கூட்டம் 11 கூட்டங்களில் தொடர்ச்சியான வட்டி விகிதத்தை மாற்றாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகிதக் குறைப்பு தனிநபர் கடன்கள், வீட்டுக்கடன், கார் கடன்கள் உள்ளிட்ட கடன்களை பெற்றவர்களுக்கு ஈஎம்ஐ குறைவதால் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதல் நாணய கொள்கை கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்தப்படியே ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக நிர்ணயித்துள்ளது.

இதோடு நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6 சதவீதமாகவும், அதிகபட்ச வரம்பு வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதக் கொள்கை கூட்டத்தில், வங்கிகளின் பண இருப்பு விகிதம் சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4% ஆக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அதே நேரத்தில், பொருளாதார ஆய்வறிக்கை 6.4% வளர்ச்சியை கணித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) கணிப்பும் இதற்கு இணையாக கணித்துள்ளது.


Post a Comment

0 Comments