பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்பு திட்டமாகும். ஓய்வூதிய திட்டமிடலுக்கு பலரும் தேர்வு செய்யும் திட்டங்களில் PPF திட்டமும் ஒன்று. இது சற்று நீண்ட கால சேமிப்பு திட்டம். பிபிஎஃப் திட்டத்தின் லாக்கின் காலமா 15 ஆண்டுகள் முடிந்த பின்னரே உங்களுடைய பணத்தை எடுக்க முடியும். ஆனால் இதற்கு வரி சலுகைகள் மற்றும் உத்தரவாதமான வருமானத்தை பெறலாம்.
PPF திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் புதிதாக நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதைய காலாண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்டுகிறது. PPF திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் ஏப்ரல் 5-ஆம் தேதியை தங்கள் கேலண்டரில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்பதை பார்ப்போம்?
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பங்களிப்பை சரியான நேரத்தில் செலுத்துவது முக்கியமாகும். நீண்ட கால வருமானத்தை வழங்க கொண்டுவரப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.. சரியான நேரத்தில் பணத்தை முதலீடு செய்து, சில நேர அட்டவணையை பின்பற்றினால் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க முடியும். அரசாங்க பத்திரங்களின் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் PPF திட்டத்தின் வட்டியும் ஏற்ற இறக்கமாக பயனர்களுக்கு வழங்கப்படும். மாதம் தோறும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு வருமானமாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதத்தின் 5-வது தேதி மற்றும் கடைசி தேதிக்கு இடையிலான மிகக் குறைந்த பேலன்ஸின் அடிப்படையில் தான் வட்டி கணக்கிடப்படுகிறது.
ஒரு மாதத்தின் 5ஆம் தேதிக்குப் பிறகு செய்யப்படும் டெபாசிட்கள் வட்டியை பெறுவதில்லை. உங்கள் வருமானத்தை அதிகரிக்க மாதத்தின் 5ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்யுங்கள். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு PPF முதலீடுகளுக்கான வட்டி வழங்கப்படுகிறது. எனவே ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன் உங்களுடைய முழு வருடாந்திர பிபிஎஃப் டெபாசிட் செய்வது, இந்த வருடத்தில் அதிகபட்ச வட்டி வருமானத்தை பெற உதவும்.
ஐந்தாம் தேதிக்கு முன்னரே உங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், நீங்கள் டெபாசிட் செய்த முழு தொகைக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்தாம் தேதிக்குப் பிறகு டெபாசிட் செய்யும்போது ஏற்கனவே உங்கள் கணக்கில் ஒரு குறைந்தபட்ச பாலன்ஸ் இருந்திருக்கும். அதாவது நீங்கள் டெபாசிட் செய்வதற்கு முன்பு.. அந்த தொகைக்கான வட்டியே கணக்கிடப்படும்.
எனவே பிபிஎஃப் முதலீட்டாளர்கள் உங்களுடைய டெபாசிட்டை ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கு முன்னர் டெபாசிட் செய்யலாம். பிபிஎஃப் திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். உதாரணமாக நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பிபிஎப் கணக்கை தொடங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வருடமும் ஏப்ரல் மாதம் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது ஏப்ரல் ஐந்தாம் தேதியை விட்டு 6ஆம் தேதி உங்களுடைய பங்களிப்பை செய்தால், அந்த மாதத்தின் 6-ஆம் தேதிக்கு பிறகு இருந்த குறைந்தபட்ச பாலன்ஸ் அடிப்படையில் தான் இருக்கும். இதனால் நீங்கள் 1.5 லட்சம் என்ற அதிகபட்ச தொகையைக் கொண்டு முதலீடு செய்தாலும் அதற்கான வட்டி உங்களுக்கு வழங்கப்படாது.
0 Comments