சென்னை: ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (இ-கேஒய்சிபதிவு) பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31 க்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களுடைய கார்டில் e-KYC செய்து கொள்வது கட்டாயமாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக ஒவ்வொரு மாதமும் அரிசி வழங்கப்படுகிறது.
கடைகளில் இலவச அரிசி
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) ரேஷன் கார்டிற்கு தலா 35 கிலோ, ஏழை குடும்பத்தை சேர்ந்த குடும்ப (பி.எச்.எச்.,) கார்டிற்கு நபருக்கு 5 கிலோ அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் கிராமப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சம் உள்ளவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இலவச அரிசி பெறும், இந்த 2 பிரிவு கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ- கே.ஓய்.சி.,) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது.
மார்ச் 31 கடை நாள்
இதற்கு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் தேவைப்படும். அனைத்து ரேஷன் கார்டுகளும் இனி டிஜிட்டல் வடிவில் கிடைக்கும். ரேஷன் வாங்கும்போது பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகும்.. இவர்களுக்கு ரேஷன் கிடைக்குமா இந்நிலையில், விரல் ரேகை இன்னமும் பதியாவர்கள் குறித்த விவரமும் வெளியாகியிருக்கிறது.. உயிரிழப்பு, வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றது போன்ற காரணங்களால், கார்டுகளில் சிலரது பெயர்கள் நீக்கப்படாமல் இருக்கிறதாம்.. எனினும்கூட, அவர்களுக்கு உரிய பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
மொத்தம் சரிபார்க்கப்பட வேண்டிய, 3.65 கோடி உறுப்பினர்களில், இதுவரை, 2.80 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், 76 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிரக்கிறது. இதனால், மார்ச்சுக்கு பிறகு பதிவு செய்யாதவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.
யாரெல்லாம் தகுதியற்றவர்கள்
சொத்து வரம்பாக, நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் சொந்தமாக டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments