அரியலூர் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.02.2025 அன்று நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.02.2025) நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.02.2025 அன்று (சனிக்கிழமை) முகாம் தத்தனூர், மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூரில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு 20000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு (தேர்ச்சி /தோல்வி) ITI, Any Diploma, Any Degree, B.A.., B.Sc., BBA, BCA., B.Com., MBA., M.A., M.Sc., M.Com., B.E., B.Tech., Agri, Hotel Management, Nursing, Paramedical முடித்த வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற கீழ் உதவித்தொகை பதிவு செய்யப்படும், சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகள் வழங்கப்படும், தேசிய அளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம் நடைபெறும், தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறும், தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்பு இணையதள சேர்க்கை முகாம் நடைபெறும், கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10000/- முதல் 25000/- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை முகாம் நடைபெறும். மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான ஆலோசனை முகாம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விளம்பர பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஆ.ரா.சிவராமன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.
0 Comments