சென்னை: திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டி வருகிறது, நமது தமிழ்நாட்டை நம்முடைய முதல்வர் பார்த்துகொள்வார் எனவும், இன்னும் 3 மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டி வருகிறது. இங்கு இருக்கும் மணமக்கள் தங்களது இல்லத்தை பார்த்து கொள்ள வேண்டும் நாட்டை நம்முடைய முதல்வர் பார்த்து கொள்வார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் குறைந்தபட்சம் 900 ரூபாயை சேமிக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்பான ஒரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார் அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் சென்று கொண்டிருக்கிறது. மேலும் முதலமைச்சரின் அறிவுரையை பெற்று இன்னும் மூன்று மாதங்களில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது." என்றார்.
0 Comments