ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? ‘இதை’ செய்யலைனா அவ்வளவு தான்! என்ன செய்யனும்?

Follow Us

ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? ‘இதை’ செய்யலைனா அவ்வளவு தான்! என்ன செய்யனும்?

 சென்னை: நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து வைத்திருக்க வேண்டு.ம் இதுவரை சுமார் ஒன்பது லட்சம் பேர் கே ஒய் சி சரிபார்க்கவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் பெயர் நீக்கம் உள்ளிட்டவை தடுக்க உடனடியாக அதனை செய்வது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள்.





தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. மாதாமாதம் உணவுப்பொருட்கள், பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை ரேசன் கார்டுகள் மூலம் தான் வழங்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2024 வரை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்திருக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் கூட தற்போது மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக தனி தனியாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வரும் ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மேலும் ரேஷன் கார்டுகள் மூலமாகத் தான் இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அடையாளம் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்ய வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள். நாடு முழுவதும் 2024 கணக்கெடுப்பின்படி சுமார் 20 கோடியே 54 லட்சம் ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சுமார் 80 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றன. இந்த நிலையில் தற்போது KYC எனப்படும் அடையாள சரிபார்ப்பு பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து இருக்க வேண்டும். தற்போது மக்கள் அவரவர் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளிலேயே இந்த பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கால அவகாசம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

 அந்த காலக்கெடுவுக்குள் ரேஷன் வாங்கும் நபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்க்க வேண்டும். அதற்கு பிறகும் சரி பார்க்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தில் ஒருவர் இருவர் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு பிறரது அடையாளங்கள் சரிபார்க்கப்படவில்லை என்றால் அவர்களது பெயர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

 நாடு முழுவதும் தற்போது வரை சுமார் ஒன்பது லட்சம் பேர் தங்கள் அடையாள சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்கள் அதனை செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. எதற்காக இந்த பணிகள் என கேட்டபோது நாடு முழுவதும் பலர் உயிரிழந்த நிலையில் அவர்களது பெயர்களை நீக்காமல் அவர்களது பெயர்களிலேயே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றன.

மேலும் இதன் காரணமாக பலருக்கு செல்ல வேண்டிய நலத்திட்ட உதவிகள் செல்லாமல் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய அடையாள சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அடையாள சரிபார்ப்பு பணியை செய்யாதவர்கள் உடனடியாக தங்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் அடையாளங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் அதிகாரிகள்.




Post a Comment

0 Comments