சென்னை: நில உரிமையாளர்கள் பலன்பெறும்வகையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய இணையதளம் பற்றி தெரியுமா? இந்த பூமி ராசி என்ற இணையதளத்தில் உள்ள எண்ணற்ற வசதிகள்? இதன் முக்கியத்துவம் என்ன? சுருக்கமாக பார்க்கலாம். நம்முடைய தமிழகத்தில், பொதுமக்களின் வசதிக்காக, எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், நிலத்தை அளவீடு செய்வதற்கு, விண்ணப்பிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல தேவையில்லை. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கும் நேரில் செலல தேவையில்லை. அனைத்துக்கும் தமிழக அரசின் தமிழ்நிலம் வெப்சைட் உதவுகிறது. இதுபோலவே, நில உரிமையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய இணையதளம்தான் பூமி ராசி.
பூமி ராசி: அதாவது, இந்தியா முழுவதிலும், 1.32 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கட்டமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன... நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உதவுவதற்காகவே, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியதுதான், "பூமி ராசி' என்ற இணையதளம். கடந்த 2018ம் ஆண்டிலிருந்து, 3,132 திட்டங்களுக்கு இழப்பீடாக 9,381 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நிலையில், "பூமி ராசி" (bhoomi rashi portal) என்ற இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, அதில், கூடுதலாக புதிய வசதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இழப்பீடுகள்: அதன்படி, நிலம் கையகப்படுத்துதல் குறித்த சட்டப்பூர்வ நடைமுறைகள், நில உரிமையாளர்களுக்கு விரைவாக இழப்பீட்டு தொகை வழங்குவது, நில உரிமையாளர்களே தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு பட்டுவாடா நிலையை தெரிந்து கொள்வது இப்படி எண்ணற்ற வசதிகளை, இந்த இணையதளம் மூலம் பெற முடியும்.
0 Comments