டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை ரூ.3,000 சுங்கக் கட்டணம் அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தி ஆண்டு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இன்றி பயணிக்கும் புதிய திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ரூ.340 செலுத்தி மாதம் முழுவதும் பயணிப்பவர்களுக்கும், ரூ.4,080 செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிப்பவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.1,080 மிச்சமாகும். இத்திட்டத்தில் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், பாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும்.
0 Comments