ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 5 லட்சம் வட்டி கிடைக்கும்.. அட்டகாசமான ரிட்டன்ஸ் தரும் அரசு திட்டம்!

Follow Us

ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ரூ. 5 லட்சம் வட்டி கிடைக்கும்.. அட்டகாசமான ரிட்டன்ஸ் தரும் அரசு திட்டம்!

 பாதுகாப்பான அதேசமயம் அதிக வருமானம் தரும் முதலீட்டை தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்காக அரசு ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். இன்றெல்லாம் முதலீட்டாளர்களுக்கு, தங்கள் முதலீடு அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி ஒரு திட்டத்தை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். அரசு வழங்கும் இந்த திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் அதற்கு ரூ.5 லட்சம் வட்டி வருமானம் பெறலாம்.




போஸ்ட் ஆபீஸ்களில் லாபகரமான முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா (KVP). KVP என்பது அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். KVP திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாகும். அதாவது நீங்கள் எவ்வளவு அசலை முதலீடு செய்கிறீர்களோ? அதே அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கும். 

முதிர்வு காலம்: KVP திட்டத்தின் முதிர்வு காலம் 115 மாதங்கள். அதாவது தோராயமாக 9 ஆண்டுகள் 7 மாதங்கள். இந்தக் காலகட்டத்திற்குள் உங்களுடைய முதலீடு அப்படியே இரட்டிப்பாகும். உதாரணமாக நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.5 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் விளைவாக மொத்த முதிர்வு தொகை ரூ.10 லட்சமாக இருக்கும். அதேபோல ரூ. 10 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ. 10 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ. 20 லட்சமாக இருக்கும்.

100% பாதுகாப்பான முதலீடு: KVP திட்டம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு திட்டம். இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் ஆபத்து இல்லாத முதலீடாகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை ஆபாயங்களுக்கு உட்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்தத் திட்டம் அப்படி இல்லை. அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். உறுதியான வருமானத்துடன் பாதுகாப்பான நீண்டகால முதலீட்டை தேடுபவர்களுக்கு கேவிபி சிறந்த தேர்வாக இருக்கும்.



Post a Comment

0 Comments