2 கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஹேப்பி.. வீடுகளில் இரு சமையல் காஸ் இணைப்பு தேவை? IOC குட்நியூஸ்

Follow Us

2 கேஸ் சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஹேப்பி.. வீடுகளில் இரு சமையல் காஸ் இணைப்பு தேவை? IOC குட்நியூஸ்

 சென்னை: வீடுகளில் 2 கேஸ் பயன்படுத்துவோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. இது இல்லத்தரசிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது. என்னாச்சு?





பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், நுகர்வோர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்தபடியே உள்ளது.

வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும்கூடிய, சமையல் காஸ் சிலிண்டர்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மேலும், வீடுகளுக்கான ரெகுலேட்டர், ரப்பர் குழாயை, இந்தியன் ஆயில் நிறுவனமே விற்பனை செய்கிறது.. வணிக சிலிண்டருக்கும், புது ரெகுலேட்டரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. அதேபோல, ஆண்டுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் ரப்பர் குழாயை நுகர்வோர்கள் மாற்ற வேண்டும். ஆனால், பலரும் அந்த ரப்பர் குழாயை மாற்றுவதில்லை.. இப்படி, ரப்பர் குழாய்களை மாற்ற வேண்டிய கஸ்டமர்களின் விவரம், கேஸ் ஏஜன்சிகளிடம் உள்ளது. எனவே, அவர்களை தொடர்பு கொண்டு, ரப்பர் குழாய் மாற்றும்படியும் ஐஓசி அறிவுறுத்தியிருந்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் மேலும், எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, ஒரு சிலிண்டர், இரண்டு சிலிண்டர் என்ற பிரிவுகளில், சிலிண்டர் இணைப்புகளை வழங்கி வருகின்றன.. வீட்டு உபயோகத்துக்கு பலரும் 2 சிலிண்டர் இணைப்புகளை பெறுகின்றனர்.

இந்நிலையில், கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜன்சிகளில், 2 சிலிண்டர் இணைப்பு வழங்க மறுப்பதாக, சில நாட்களுக்கு புகார் எழுந்தன. அதாவது தங்களிடம் மாற்று சிலிண்டர், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே வழங்கப்படும், இல்லாவிட்டால் தனியார் ஏஜென்சிகளில், கேஸ் இணைப்பும், 2 சிலிண்டர் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிலர் சொல்லிவிடுகிறார்களாம் வீடுகளுக்கு 2 கேஸ்கள் கூட்டுறவு பண்டக சாலைகளில், வீடுகளுக்கு 2 சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற, புகார்கள் கிளம்பியதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், 2 காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காஸ் ஏஜன்சிகள் வாயிலாக, சென்னையில், 88 இரு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நகர் முழுதும், இந்தியன் ஆயிலின் காஸ் ஏஜென்களில் அவை, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கி, எந்த ஒரு குறைகளுக்கும் உடனடி தீர்வு காணும் வகையில் செயல்படுகின்றன.

புகார்கள் வாடிக்கையாளர்கள் புகார் தொடர்பான சேவைகளை பெற, 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சென்னை அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்தை, 044 2433 9236 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, வாடிக்கையாளர் கருத்து மற்றும் புகாருக்கான பதிவேடு அனைத்து கேஸ் ஏஜன்சிகளிலும் கிடைக்கிறது. அங்கு, இந்தியன் ஆயில் அதிகாரிகளின் தொடர்பு விபரங்களும் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓசியின் இந்த அறிவிப்பானது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.

Post a Comment

0 Comments