ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் போதும் … இந்திய அஞ்சல் துறையில் உங்களுக்காக காத்திருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு!

 

ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் போதும் … இந்திய அஞ்சல் துறையில் உங்களுக்காக காத்திருக்கு சூப்பர் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.05.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய Post Office காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Staff Car Driver வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 56 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Car Driver கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க SSLC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.

India Post சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments