எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.15,700/-
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நுகர்வோர் குறைதீர் ஆணைய காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 1 பணியிடம்
உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
குறைதீர் ஆணைய பணிக்கான சம்பள விவரம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15,700/- + DA + HRA
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 10.05.2023 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
107/1, நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்,
அண்ணா நகர், தாந்தோன்றிமலை,
கரூர்-639 005.
0 Comments