ஒரு நாளைக்கு ரூ.560/- சம்பளத்தில் தமிழக ஊர்க்காவல் படையில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
சேலம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விரும்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரசு வேலை வாய்ப்பை தவற விடாமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சேலம் ஊர்க்காவல் படையில் 55 ஊர்க்காவல் படை பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் 52 ஆண்கள்கள் மற்றும் மூன்று பெண் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆண்கள் உயரம் 167செ.மீ, மற்றும் பெண்கள் 157 செ.மீ. இருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணியிடங்களுக்கு 26-ம் தேதி, சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற உள்ளது.
- தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணிபுரிய அழைக்கப்படுவர். பணிபுரியும் நாட்களுக்கு தலா ரூ.560 வீதம் மாதம் ரூ.2,800 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஊர் காவல் படை க்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், 26 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு ஆஜராகும் போது புகைப்படம் 2, கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு (அசல் மற்றும் நகல்கள்) கொண்டு.வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments