8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Data Entry Operator, Operation Theatre Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Data Entry Operator, Operation Theatre Assistant, MPHW, Security Guard, Physiotherapist, Early Intervention cum Special Educator cum Social Worker, OT Technician & Refrigeration Mechanic பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator – 03 பணியிடங்கள்

Operation Theatre Assistant – 02 பணியிடங்கள்

MPHW – 06 பணியிடங்கள்

Security Guard – 02 பணியிடங்கள்

Physiotherapist – 03 பணியிடங்கள்

Early Intervention cum Special Educator cum Social Worker – 01 பணியிடங்கள்

OT Technician – 01 பணியிடங்கள்

Refrigeration Mechanic – 01 பணியிடங்கள்

மாவட்ட சுகாதார சங்க கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / ITI / Diploma / Degree / PG Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாவட்ட சுகாதார சங்க ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.10.2022 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம்(District Health Society), திண்டல், ஈரோடு-638012

Download Notification PDF

Post a Comment

0 Comments