தமிழக ஊர்காவல் படை வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 தமிழக ஊர்காவல் படை வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஊர்க்காவல்படை பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் ஆனது வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஊர்க்காவல்படை (Home Guard) பணிக்கென மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 18 வயது பூர்த்தியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 01.10.2022ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Download Notification PDF

Post a Comment

0 Comments