DRDO நிறுவனத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,12,400/- சம்பளம்

Follow Us

DRDO நிறுவனத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,12,400/- சம்பளம்

 

DRDO நிறுவனத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,12,400/- சம்பளம்

DRDO கீழ் இயங்கிவரும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (DRDO-CEPTAM) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Senior Technical Assistant-B, Technician-A ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பணியாளர் திறமை மேலாண்மை மையம் காலிப்பணியிடங்கள்:

பணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் (DRDO-CEPTAM) Agriculture, Automobile Engineer, Chemistry போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Technical Assistant-B பணிக்கு 1075 பணியிடங்களும், Technician-A பணிக்கு 826 பணியிடங்களும் என மொத்தமாக 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

STA-B, Technician-A கல்வித்தகுதி:
  • Senior Technical Assistant-B பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Technician-A பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • STA-B, Technician-A வயது வரம்பு:
    • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.09.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    • மேலும் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
    STA-B, Technician-A ஊதியம்:
    • Senior Technical Assistant-B பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Pay Matrix Level-6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,4000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
    • Technician-A பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Pay Matrix Level-2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
    • DRDO-CEPTAM தேர்வு முறை:

      இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

      DRDO-CEPTAM விண்ணப்பிக்கும் முறை:

      விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 03.09.2022 முதல் 23.09.2022 அன்று வரை https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

      Download Notification Link

      Online Application Link

Post a Comment

0 Comments