தமிழக ஊரக வளர்ச்சி துறையில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow Us

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தமிழக ஊரக வளர்ச்சி துறையில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மயிலாடு துறை மாவட்டம்‌ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றியம்‌, ஒன்றிய தலைப்பில்‌ காலியாக உள்ள அலுவலக உதவியாளர்‌ ஒரு காலிப்பணியிடத்தை நேரடி நியமனம்‌ முலம்‌ நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

அலுவலக உதவியாளர்‌ வயது வரம்பு:

தேர்வு செய்யப்படும்‌ ஆண்டில்‌ 01.07.2022 தேதியன்று பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவினர்கள்‌ (முஸ்லீம்கள் தவிர) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

தேர்வுசெய்யப்பரும்‌ நபர்களுக்கு 2017 திருந்திய ஊதியக்குழு விதிகளின்‌ கீழ்‌ சிறப்பு காலமுறை ஊதியம்‌ அட்டவணையின் படி, குறைந்தபட்சம்‌ தொடக்கநிலை ஊதியம்‌ ரூ.15700-50000/- மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்படும்.

TNRD பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ உரிய சான்றுகளின்‌ நகல்களுடன்‌ ஆணையர்‌, ஊராட்சி ஒன்றியம்‌, சீர்காழி அவர்களிடம்‌ நேரிலோ அல்லது பதிவஞ்சல்‌ மூலமாகவோ 11.09.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Post a Comment

0 Comments