தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2022 – டிகிரி படித்தவர்க்கு ரூ.30,000 ஊதியம்..!
காஞ்சிபுரத்தில் உள்ள One Stop Centre எனும் ஒரு நிறுத்த மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Case Worker, Security Guard, Multi-Purpose Helper ஆகிய பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
OSC Job காலிப்பணியிடங்கள்:
Case Worker பணிக்கு 4 பணியிடங்கள், Centre Administrator, Senior Counsellor, Security Guard மற்றும் Multi-Purpose Helper ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது.
Kancheepuram Job கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதி குறித்து அறிவிப்பில் காணலாம்.
OSC Job முன் அனுபவம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 1 ஆண்டு counselling பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 4 ஆண்டுகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Kancheepuram Job ஊதிய தொகை:
- Centre Administrator பணிக்கு ரூ.30,000/- என்றும்,
- Senior Counsellor பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Case Worker பணிக்கு ரூ.15,000/- என்றும்,
- Security Guard பணிக்கு ரூ.10,000/- என்றும்,
- Multi-Purpose Helper பணிக்கு ரூ. 6,400/- என்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
OSC Job தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kancheepuram Job விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 23.06.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
0 Comments