அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை | TN JOBS 2022

 

அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை – 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Office Assistant பணியிடங்கள்:

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி :

அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Office Assistant வயது வரம்பு:

அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 01.01.2022 ம் தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 34 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant சம்பளம்:

அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வான பின், பணியின் போது மாத சம்பளமாக நிலை – 1 ன்படி, குறைந்தது ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படும்.

Office Assistant தேர்வு முறை:

அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Office Assistant விண்ணப்பிக்கும் முறை:

அலுவலக உதவியாளர் எனும் Office Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 13.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா நகர், கோவில்பட்டி – 628 503. என்கிற தபால் முகவரிக்கு வந்து சேரும் படி அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Office Assistant  NotificationPost a Comment

0 Comments