8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு – தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022..!

 

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு – தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022..!

நாகப்பட்டினம் மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Case Worker, Security Guard & Multipurpose Helper பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DSWO பணியிடங்கள்:

நாகப்பட்டினம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் Case Worker, Security Guard & Multipurpose Helper பதவிக்கு என 6 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Case Worker பணிக்கு – 04
Multipurpose Helper பணிக்கு – 01
Security Guard பணிக்கு – 01

DSWO கல்வித் தகுதி

Case Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் BSW & MSW டிகிரி முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு குறைந்தது 1 வருட குடும்ப நல ஆலோசனையில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Multipurpose Helper பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சமையல் தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Security Guard பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சமையல் தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DSWO வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 21 வயது என்றும் அதிகபட்ச வயதாக 35 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

DSWO ஊதிய விவரம்:

Case Worker பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.12,000/- மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகையாக ரூ.3000 பெறுவார்கள்.
Multipurpose Helper பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.6,400/- மாத ஊதியம் பெறுவார்கள்.
Security Guard பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.10,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

DSWO தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

DSWO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை கீழுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ (25.03.2022) இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

DSWO-Nagapattinam-Notification

DSWO-Nagapattinam-Application-Form

Post a Comment

0 Comments