அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

 

அரசு வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தேனி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தற்போது Village Assistant பணிக்கு காலிப்பணியிடம் நிரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் திறமையுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Village Assistant காலிப்பணியிடங்கள்:

தேனி வட்டாச்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கென்று மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கிராம உதவியாளர் கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், விண்ணப்பதாரர்கள் ஐந்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


கிராம உதவியாளர் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்ச வயதாக 37 வயது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

Village Assistant ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராம உதவியாளர் தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொண்டு, அதில் கேட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்தா விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 15.01.2022 ம் நாள் இறுதி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைந்து விண்ணப்பிக்க தெரிவித்துக்கொள்கிறோம்.

Download Official Notification PDF

Official Website


Post a Comment

0 Comments