தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – நாள் ஒன்றுக்கு ரூ.250/- ஊதியம் !
திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழ்நாடு ஊரக திட்டத்தின் மூலம் தொழில்சார் சமூக வல்லுநர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய முழு தகவல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் :
தமிழக அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படும் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் உள்ள விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பிற உற்பத்தியாளர் மற்றும் தொழில் முனைவோர் குழுக்களை ஊக்குவிக்கவும் மற்றும் வங்கிகளின் நிதி உதவி இணைப்பை ஏற்படுத்தவும், தொழில் திட்டங்கள் தயாரிக்கவும், இத்திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இத்திட்ட வட்டார பணியாளர்களுடன் இணைந்து ஊராட்சி அளவில் களப் பணியாற்றிட ஊராட்சிக்கு 1 நபர் வீதம் மொத்தம் 198 தொழில்சார் சமூக வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வயது வரம்பு :
இப்பணிக்கான தகுதிகள் திட்டம் செயல்படூம் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் / உறுப்பினர் குடும்பத்தைச் சார்ந்த 25 முதல் 45 வயதிற்குள் உள்ள நபர்களாக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேலை – கல்வி தகுதி :
பட்டபடிப்பு தேர்ச்சிபெற்று Android Mobile பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். இப்பணிக்கு தொடர்புடைய கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு வேலை – சம்பளம் :
தேர்ந்தெடுக்கப்படும் நபா்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 20 நாட்கள் தொடர்புடைய ஊராட்சிகளில் களப்பணியாற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மதிப்பூதியம் / ஊக்கதொகையாக நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி கிராம வறுமை ஒழிப்புசங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது நேரிலோ வட்டார திட்ட அலுவலகத்தில் 7 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments