தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 75 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சட்டப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
- பேராசிரியர் – 2
- இணைப் பேராசிரியர் – 4
- உதவி பேராசிரியர் – 68
- உடற்கல்வி உதவி இயக்குநர் – 1
TNDALU வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
TNDALU கல்வி தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை :
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD ரூ .590/-
- General ரூ. 1180/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், “பூம்பொழில்”, எண்.5, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை – 600 028 என்ற முகவரிக்கு 19.01.2022 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments